Saturday, August 4, 2012
கீழக்கரையில் ஏடிஎம் மெஷின்கள் உண்டு !பணம் இல்லை ! பொதுமக்கள் அதிருப்தி !
பொதுவாக கீழக்கரையில் ரமழான் மாதத்தில் வங்கிகளில் அதிகமான பண பரிவர்த்தனை நடைபெறும். கீழக்கரையில் வங்கிகளின் 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளன.
அவை சரியாக பராமரிக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவசரத்துக்கு பணம் எடுக்க சென்றால் ஏடிஎம் மையத்தில் மிஷின் பழுது, பணம் இல்லை என்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பேங்கில் பேலன்ஸ் இருந்தும் ATM மெஷினில் பணம் எடுக்க முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஹமீது அசாருதீன் கூறுகையில்,
ஏடிஎம் மெஷினில் நோன்பு மாதத்தில் அதிகளவில் மக்கள் பணம் எடுப்பார்கள் என்பதை வங்கி அதிகாரிகள் முன்னரே அறிந்துள்ளார்கள் ஆனால் எந்த நேரம் பார்த்தாலும் பணம் இல்லை என்றும் நெட்வொர்க் இல்லை என்றும் பண இருப்பு பற்றாக்குறை போன்றக் காரணங்களால் ஏடிஎம் மையம் அடிக்கடி மூடப்பட்டு விடுகிறது.OUT OFF சர்வீஸ் பலகை வைக்க படுகிறது . 24 மணி நேர சேவை என்கிறார்கள் ஆனால் 1 மணி நேரம் மட்டும்தான் பணம் எடுக்க முடிகிறது.எனவே பண பற்றாக்குறையை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் மேலும் கடந்த 15 நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று பின்னர் பணம் இல்லை என்றவுடன் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.ATM மெஷின் வாசலில் பணம் எடுக்க கூட்டம் அலை மோதுகிறது.வங்கியில் டெபாசிட் செய்யுங்கள் என்று கூவி,கூவி அழைக்கிறார்கள் இப்படி செயல்பட்டால் எப்படி டெபசிட் செய்வது ? எனவே உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
ரம்ஜான் பெருநாள் நெருங்கி வருவதால் அநேகர் பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை. மேலும் மாத ஆரம்பமாக இருப்பதால் மாதச் சமபளக்காரார்களும் அதிகமாக கூடுகிறார்கள்.இதற்கிடையில் ஸ்டேட பேங்கில் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு கீழ் பணம் எடுப்பவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில்லை.தானியங்கி இயந்திரத்தை பயன் படுத்த வற்புறுத்துகிறார்கள்.(தானியங்கி இயந்திரம் வேலை செய்யாதது பற்றி கூறினால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்). ஆகவே கூட்டம் அதிகமாக இருக்கிறது.மற்ற இரு தானியங்கி இயந்திரம் வைத்துள்ள ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கிகளுக்கு கீழக்கரையில் வங்கி அலுவலகம் கிடையாது.
ReplyDeleteஎந்த வங்கி ஏடிஎம் அட்டையையும் மற்ற வங்கி தானியங்கி இயந்தரத்திலும் பயன் படுத்தலாம் என விதி முறை இருந்தாலும் நகரில் உள்ள மூன்று தானியங்கி வேலை செய்யவில்லை என்றால் மக்கள் எங்கு செல்வார்கள்? மேலும் சம்பந்த்ப்பட்ட வங்கியை தவிர்த்து சூழ்நிலை காரணமாக வேறு வங்கி தானியங்கி இயந்திரத்தில் மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயன் படுத்தினால் அபராதக் கட்டணம் நமது அறிவுக்கு எட்டாமல் அவர்களுக்குள்ள அதிகாரத்தை பயன் படுத்தி கணக்கில் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? இது அடவாடிதனம் இல்லையா? இதை யார் தட்டி கேட்பது? அவரவர் வங்கி தானியங்கி இயந்திரங்கள் முறையாக வேலை செய்தால் மக்கள் ஏன் அடுத்த வங்கி தானியங்கி மையத்துக்கு செல்லுகிறார்கள்?
இதனால் மக்கள் படும் அவதி சொல்லும் தரமன்று, குறிப்பாக பெண்கள். நகரின் கடைக் கோடியில் வசிக்கும் 500 பிளாட் மக்கள் ஆட்டோவில் வந்து பணம் எடுக்க முடியாமல் திரும்பி செல்லும் போது எவ்வளவு பணம் விரையம்? மீண்டும் செலவு செய்து பணம் எடுக்க வர வேண்டிய கட்டாய சூழநிலை. பாதுகாப்பு கருதி இது விஷயமாக அடுத்தவர் உதவியையும் நாட முடியாது.இன்னும் கீழக்கரையில் குறைந்த தூரத்திற்கு கூட ஆட்டோ கட்டணங்கள் எவ்வளவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இது அடிக்கடி நடக்கும் துயரச் சம்பவமாகி விட்டது. இத்ற்கு நிரந்தரமான விடிவு காலம் எப்போது என் மக்கள் ஏங்குகிறார்கள். விழி பிதுங்கி பரிதவிக்கிறார்கள்.இதன் கொடுமையை அனுபவித்தவர்கள்தான் பூரணமாக உணர முடியும்.
சில நாட்களுக்கு முன் பால்காரர்க்கு பணம் கொடுக்க முடியாமல் நான் அடைந்த வேதனை....அப்பப்பா... வங்கியில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும் என்ன பயன்? கடன் வாஙக வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.
இது ஒரு நாள் பிரச்சனை அல்ல. அடிக்கடி இது போல நிகழ்வதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
உன்னை சொல்லி குற்றம் இல்லை. என்னை சொல்லி குற்றம் இல்லை.(கணீணி) காலம் செயத கோலமிடி இது.