Sunday, August 19, 2012

முப்பது நாட்கள் நோன்பிருந்த ராதகிருஷ்ணன் நடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் நிறைவு செய்தார்!



ரமலான் மாதத்தில் கீழக்கரையில்தொடர்ந்து 12 ஆண்டுகளாக நோன்பிருந்து வரும் ராதாகிருஸ்ணன் தினமும் நடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் இப்தாரில் கலந்து கொண்டு இன்று 30ம் நாள் நோன்பை நிறைவு செய்தார். அனைவ‌ருக்கும் பெருநாள் வாழ்த்துக்க‌ளை தெரிவித்தார்.

முந்தைய‌ செய்தி கீழே த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும்
தங்கம் ராதாகிருஷ்ணன், 12 ஆண்டுகளாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து வருகிறார். கீழக்கரையை சேர்ந்தவர் தங்கம் ராதாகிருஷ்ணன்(65). இவர், தபால் அலுவலக‌ தெருவில் சீனியப்பா ஹோட்டல் அருகில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்கத்தின் செயலாளராக பணியாற்றி வரும் இவர் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வருகிறார்.

இவர் கூறியதாவது:
நண்பர் ஒருவரிடம் கடந்த 2000ல் ரமலான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது.போட்டிக்காக‌ அந்த ஆண்டு நோன்பு நூற்றேன்.மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது அதன் பின் கடந்த 12 ஆண்டுகளாக‌ தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன்.நோன்பு இருப்பதால் அதன் மகிமையை என்னால் உணர முடிகிறது. இதில் மன திருப்தி ஏற்படுகிறது .உடல் ஆரோக்கியம் பெறுகிறது.இம்மாதம் நோன்பு நோற்கும் அனைத்து இஸ்லாமியா சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த நல்ல இப்ராகிம் என்பவர் கூறுகையில் ,த‌ங‌க‌ம் ராதாகிருஸ்ண‌ன் ப‌ல‌ ஆண்டு காலமாக அனைத்து ச‌மூக‌ ம‌க்க‌ளிட‌மும் ச‌கோத‌ர‌ பாச‌த்துட‌ன் ப‌ழ‌குப‌வ‌ர். மத நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர் என்றார்



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.