பட விளக்கம் : நிகழ்ச்சியின் போது சதக் கல்லூரி குறித்த புத்தகத்தை அப்துல் ரஹ்மான்.எம்பி. வெளியிட சதக் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஜகாபர் பெற்று கொண்டார்
கல்லூரி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்
கீழக்கரை சதக் கல்லூரி இப்தார் நிகழ்ச்சியில் பங்கு பெற கீழக்கரைக்கு வருகை தந்தார்.
கல்லூரி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். காரைக்குடி-தூத்துக்குடி வரை அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே நடந்தது. ஆயத்தப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து நிருபர்கள் அப்துல் ரகுமானிடம் எம்பியிடம் கேட்ட போது
அவர் கூறியதாவது, ரயில்வே துறையில் செயல்படுத்தப்பட்ட பல் வேறு திட்டங்கள் நிறைவு பெறாமல் உள்ளது. எனவே இந்த நிலையி ல்புதிய திட்டங்கள் நிறைவேறுவது சற்று கடினம் தான் ஆனாலும் நிச்சயமாக தங்கள் பகுதி எம்பி ரித்தீஷ்சுடன் சேர்ந்து நானும் இத்திட்டம் நிறைவேற நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்
.
மேலும் புதிய போஸ்போர்ட் வழங்குதல் குறித்து அவர் கூறியதாவது,
திருமணத்தை பதிவு(ரெஜிஸ்டர்) அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால்தான் தம்பதியருக்கு பாஸ்போர்ட் கிடைக்கும் என்ற விதிமுறையால் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.இஸ்லாமியர்கள் திருமணங்களை அந்தந்த ஊர்ஜமாத்களிலே முறையாக பதிவு செய்யும் முறை பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது மேலும் அரசு காஜி மூலம் திருமண சான்றிதழும் வழங்கப்படுகிறதுஇவற்றோடு. கூடுதலாக கணவன்,மனைவி படத்தை ஒட்டி நோட்டரி அட்டெஸ்ட் செய்து வழங்கினால் அதையே சான்றிதழாக ஏற்று கொள்ள வேண்டும் என்ற அலோசனை சொல்லப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக இதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் பேசப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
முன்னதாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் அப்துல் ரஹ்மான்.எம்.பி,டிஐஜி ராம சுப்பிரமணியன்,கலெக்டர் நந்தகுமார்,எஸ்.பி,சதக் கல்லூரி இயக்குநர் யூசுப் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து பேசினர்.
அப்போ காரைக்குடி-தூத்துகுடி அகலப் பாதை நிச்சயமாக வரப் போவதில்லை, அப்படித்தானே.
ReplyDeleteயார் அந்த ரித்தீஷ்?
கோடையிலும், மழையிலும் ஆண்டாண்டு காலமாக ஏர்வாடி முச்சந்தி சாலையில் மக்களும், கல்லூரி, பள்ளி மாணவச் செல்வங்கள் படும் அவதி அவருக்கும், ஊரில் உள்ள அவரின் துதிபாடிகளின் கண்ணுக்கு, காதுக்கு படவில்லையே!!! வருடா வருடம் மக்கள் வரிப் பணத்திலிருந்து வழங்கபடும் கோடிக்கணக்கான தொகுதி நிதி என்னவாயிற்று? ராமநாதபுரம் தொகுதியிலேயே கீழக்கரை பிரதான ஊர் ஆயிற்றே.
இதனால் வேதனைப்படும் வேளையில் எந்தன் பணிவான தாழ்மையான வேண்டுகோள்: மதிப்பும், மரியாதைக்குரிய சீதக்காதி டிரஸ்ட், சதக்கு டிரஸ்ட் இருவரும் இணைந்து நிறுவனத்திற்கு ஒன்றாக ஏர்வாடி முச்சந்தியில் கீழக்கரை-இராமநாதபரம் பஸ் போகும் நிறுத்ததிலும், கீழக்கரை-ஏர்வாடி பஸ் போகும் நிறுத்ததிலும் தற்சமயம் கோவை, மதுரையில் ஏன் இரமநாதபுரம் அரண்மனை முன்பாக உள்ளது போல நிழற் கூரைகளை அமைத்து கொடுத்தீர்களானால் ப்யன் அடையும் மக்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் வாயார நிச்சயமாக வாழ்த்துவார்கள்.அது உங்கள் தலைமுறைகளை நிச்சயம் தலை காக்கும்.
அல்லது ஜீ தமிழ் தொலைகாடசி ஒளிபரப்பில் ம்திப்புக்குரிய் சகோதரி டாகடர். ரஹ்மத்துனிஸா பி.எஸ்.எ.ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்டு காட்டியதை போல் அரசு செய்ய வேண்டியதை செய்யத் தவறுவதால் ஊர் மக்கள்தான் துண்டு ஏந்தி வசூல் செய்து, வசதிகளை செய்துகொள்ள வேண்டுமோ? அதுதானே கீழக்கரையின் தலையெழுத்து!!!
பாவம். மனித நேயர், மத நலலிணக்க நேசர், சமூக ஆர்வலர் நண்பர் தங்கம் இராதகிருஷ்ணன் தன் வாழ் நாளில் காரைக்குடி-தூத்துக்குடி அகலப் பாதையை காண துடித்து கொண்டு இருக்கிறார்.அதற்காக சம்பந்த்ப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார். அவருக்காகவது அகலப்பாதை அமைய பிரார்த்திப்போமா.
எங்கள் அண்ணன் அப்துல் ரகுமான் வேலூர் தொகுதிக்கு மட்டும் எம் .பி. அல்ல தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள்
ReplyDeleteஉரிமை மீட்பு போராளி !
பாஸ்போர்ட் விசயத்தில் அண்ணன் அப்துல் ரகுமான் அவர்கள் எடுக்கும் முயற்ச்சிகளை அண்மையில் விருதுநகரில் நடந்த பள்ளிகூட விழாவில் விருதுநகர் பாரதிய ஜனதாவின் நகரதலைவர் அவர்கள் நேரில் வந்து உங்கள் சமுதாய மக்களுக்கு பாஸ்போர்ட் விசயங்களில் எவ்வளவு எளிதாக செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாக கிடைக்க நீங்கள் பல ஆணைகளை பெற்று தந்துள்ளீர்கள் என்று பெருமை பட பாராட்டினார்
ReplyDelete