கீழக்கரை நகராட்சி சார்பாக 15 டிரை சைக்கிள்கள் 6 டிரை சைக்கிள்கள் இன்று பயன்பாட்டுக்கு வந்தன.
டிரை சைக்கிள்களை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்து பயன்பாடிற்கு விடும் நிகழ்ச்சி இன்று நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமிஷனர் முகமது மைதீன்,கவுன்சிலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஒரு டிரை சைக்கிளில் இரண்டு நகராட்சி ஊழியர்கள் வீதம் சென்று நகரில் குப்பைகளை சேகரிப்பார்கள்.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,
ஊழியர்கள் பற்றாகுறையால் தற்சமயம் 6 டிரை சைக்கிள்கள் மட்டும் பயன்படுத்தபடுகிறது.விரைவில் அனைத்தையும் பயன்படுத்தும் சூழல் ஏற்படும்.இதன் மூலம் சாலையோரங்களில் குப்பைகள் சேர்வது தவிர்க்கப்படும் என்றார்.
சீரழிந்து போன நகர் சுகாதாரத்தை சீர் செய்ய ஆணையர் அவர்களும், நகராட்சி தலைவியும் எடுத்து வரும் முயற்சிகளை மனதார பாராட்ட கடமைப் பட்டுள்ளோம் பணிகள் தொய்வு இல்லாமல் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுகிறோம்.
ReplyDeleteமின்ஹாஜியார் பள்ளி முகப்பில் உள்ள சுகாதார சீர்கேட்டை சீர் செய்ய விரைந்து செயல்படுவதுடன் அருகில் உஅள்ள ஜும்மா நடைபெறும் பழைய குத்பா பள்ளி முகப்பிலும் கற்கள் மற்றும் கூழங்களை நீக்கி அந்த சாலையையும் காலதாமத்தை தவிர்த்து செப்பனிட அன்புடன் வேண்டுகிறோம்.