Thursday, August 16, 2012

கீழ‌க்க‌ரையில் முத‌ல்முறையாக‌ ந‌க‌ராட்சி ம‌ற்றும் த‌னியார் இணைந்து இண்ட‌ர்லாக் பிளாக்ஸ் சாலை!கீழக்கரை சாலை தெரு பகுதியில் சுமார்200 மீட்டர் அளவிலான சாலையை கீழக்கரையில் முதல்முறையாக "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்கள் பதித்து சாலை அமைக்க நகராட்சியுடன் இணைந்து செயல்பட ரோட்டரி சங்கம் முன் வந்துள்ளது.இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனையில் நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,ரோட்டரி சங்க தலைவர் ஆசார்,கவுன்சிலர் சித்தீக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில் 200 மீட்டருக்கு இண்டர்லாக் பிளாக்ஸ் சாலைக்கான செலவில் 60 சதவீத தொகையை நகராட்சியும் மீதி40 சதவீத செலவை ரோட்டரி சங்கம் சார்பில் அதன் ஆசாத் ஏற்று கொள்வாதாக முடிவெடுக்கப்பட்டது விரைவில் இதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பணிகளிகள் நிறைவு செய்யப்பட்டு முறைபடியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தெரிவித்தார்.

இது குறித்து ரோட்டரி சங்க தலைவர் ஆசாத் கூறியதாவது,


கீழக்கரையில் மேடு, பள்ளம் ,மணல் நிறைந்த சாலையில், மழைநீர், கழிவுநீர் தேங்கி, தார் சாலை விரைவில் சேதமடைகிறது. புதிதாக போடப்படும் சாலையின் ஆயுட் காலம் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் என்ற நிலையில்,நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்படும் தார் சாலைகள். ஓரிரு ஆண்டுகளில் சேதமடைந்து விடுகின்றன. சம்மந்தப்பட்ட துறைகளின் சார்பில் மீண்டும் பல லட்சம் ரூபாய் சாலை பணிக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே அரசின் கணிசமான தொகை வீணாகிறது.

எனவே இதை தவிர்ப்பதற்கு கீழக்கரையில் முதல் முயற்சியாக "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்கள் பதித்து சாலையை பணியை தொடங்கலாம் என முயற்சியில் இறங்கியுள்ளோம். "இன்டர்லாக் பிளாக்ஸ்' கற்களின் ஆயுட்காலம் குறைந்தது 10 ஆண்டுகள்; மழைநீர் கற்களின் மீது பட்டாலும் சாலை சேதமடையாது.இந்த சாலை அமைப்பதற்கான செலவில் 40 சதவீத தொகையை ரோட்டரி சங்கம் சார்பில் நாங்கள் ஏற்றுகொள்ள இருக்கிறோம் என்றார்.


3 comments:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 16, 2012 at 10:20 PM

  கணீனி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்கள் அவசிய்மான, தேவையான ஒன்று. இது காலத்தின் கட்டாயம்.

  இந்த அருமையான் சந்தர்ப்பத்தில் எமது அன்பான யோசனை: ஏற்கனவே நிதி ஒதுக்கி நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டபடி கிடைப்பில் கிடக்கும் புதிய பி.வி.சி. குடிநீர் குழாய்களை பதித்து விட்டு. இண்டர்லாக் பிளாக்ஸ் கற்களைக் கொண்டு சாலையை அமைத்தால், பதிவில் சொல்லப்ப்ட்டுள்ளது போல நீணட காலத்திற்கு சேதாரம் இல்லாமல் உழைக்க வாய்ப்புண்டு. இந்த திட்ட செயல் பாட்டிற்கு கை கொடுக்கும் கீழக்கரை ரோட்ட்ரி சங்கம் ஈடுபடுவதால் புதிதாக பொருப்பேற்றிருக்கும் அதன் தலைவர் சகோதரர் ஆஸாத் அவர்கள் ஒரு கட்டட பொறியாளாராக இருப்பதினால் லஞ்ச லாவண்ணியத்திற்கு இட்மில்லாத வகையில் நல்ல தரமனதாக பெயர் சொல்லும் வண்ணம் அமையும் என ஆசைப்படுகிறேம்

  ReplyDelete
 2. எவ்வளவு லட்சம் செலவு செய்து ரோடு போட்டாலும் குறுத்த மண்ணை கொட்டி மூடி விடுவார்களே..!

  ReplyDelete
  Replies
  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 17, 2012 at 7:13 PM

   இரண்டு கை சேர்ந்தால்தான் சத்தம் வரும். இது அரிச்சுவடி.ஆகவே பொது மக்களுக்கும் தார்மீக கடமை மற்றூம் பொருப்பு கட்டாயமாக வந்தே ஆக வேண்டும்.

   Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.