
கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வரும் தாய்மார்கள் உட்காருவதற்கு கூட சேர்கள் இல்லை இது குறித்து நமது கீழக்கரை டைம்ஸ்,தினகரன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்து.http://keelakaraitimes.blogspot.in/2012/08/blog-post_8.html
இச்செய்தியை கேள்விபட்ட மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக தனது அறக்கட்டளை சார்பில் பத்து சேர்களை வாங்கி கீழக்கரை ஆரம்ப நிலைய சுகாதார நிலையத்திற்கு வழங்கினார். அரசு மருத்துவர் ராசீக்தீன்,சுகாதார நிலைய செல்லக்கன்னு ஆகியோர் சேர்களை பெற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ரிபாய்தீன்,சிராஜீதீன்,டாக்டர் செய்யது அப்துல் காதர்,கவுன்சிலர்கள் முகைதீன் இப்ராகிம்,இடிமின்னல் ஹாஜா,பேங்க் மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் கல்ந்து கொண்டனர்.
இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர் கூறுகையில் ,


எங்களால் முடிந்த வரை நலப்பணிகளை செய்து வருகிறோம். தேவையானவர்களுக்கு குறைந்த அளவிலான பண உதவி உள்பட நல உதவிகளை செய்து வருகிறோம்.இதற்காக குழுக்கள் அமைத்து உரியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் ரேசன் கார்டு போல் வடிவமைக்கப்பட்ட அட்டையை வழங்கியுள்ளோம் ஒவ்வொருமுறை நாங்கள் நல உதவிகளை வழங்கும் போது பயனாளிகள் அட்டையை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.இதன் மூலம் உரியவர்களுக்கு உதவி போய் சேரும் நிலை ஏற்படுகிறது.இன்ஷா அல்லா ஆர்வமுள்ளவர்கள் எங்கள் அமைப்பில் இணைந்து மக்கள் பணியாற்ற விரும்பினால் வரவேற்க தயாராக உள்ளேன் என்றார்.
மனதார வாழ்த்த பொருத்தமான வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறோம்.. அவ்வளவு தூரம் மனதை நெகிழ வைத்துவிட்டது இந்த பதிவு.
ReplyDeleteஇந்த கலவி ஆண்டின் தொடக்கத்தில் கூட ரூபாய் நான்கு லடசத்திற்கும் மேலான மதிப்பில் நம்து ஊர் மாணவச் செல்வங்களின் கல்விக்கான உதவிகளை செயத இதே மக்கள் சேவை அறக்கடடளையை இந்த நேரத்தில் நினவு கூறத்தக்கது நமது கட்டாய கடமையாகும்.
இதன் சர்வ புகழும் வல்ல ரஹ்மானுக்கும், தம்பி உமர் அப்துல் காதர் அவ்ர்களை ஈன்ரெடுத்த இறை நேசச் செல்வர் மர்ஹூம் எம்.கே.வி.மௌலான காக்கா அவர்களுக்கும் தான் சாரும்.அவர்களின் சேவை மேன்மேலுல் தொடர அகிலத்தை படைத்து ஆளும் வல்ல ரஹ்மானிடத்தில் உளமார துவாச் செய்கிறோம், ஆமீன்.
மேலும் தேவையான காற்றாடியையும் மாற்றிக் கொடுத்தார்களானால் அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதை கீழக்கரை டைம்ஸின் மூலமாக தங்களின் பார்வைக்கு, உடனடி நடவடிக்கைக்கு கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைக்றோம். ஈத் முபாரக்