Friday, August 10, 2012
தாய்பால்தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம்!வலியுறுத்தி கீழக்கரையில் தாய்பால் வார விழா !
தமிழகத்தில் ஒருகாலத்தில் 2வயது குழந்தைகள் வரை தாய்பால் கொடுத்து வந்த காலம் போய் தற்போது குழந்தைகளுக்கு ஆறுமாதமாவது தாய்பால் கொடுங்கள் என்று அரசே வலியுறுத்தும் அளவுக்கு நிலைமை உள்ளது.யுனிசெப் நிறுவனம் உலகம் முழுவதும் ஆய்வு நடத்தி உலக குழந்தைகள் அறிக்கை-2011 வெளியிட்டது.இதில் உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு 32.6 சதவீத குழந்தைகள்தான் தாய்பால் பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் தாய்பாலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வருகிறாது
இந்நிலையில் உலக தாய்பால் வார விழா பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் கீழக்கரையில் இவ்விழா நடைபெற்றது.கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தாய்பாலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.நகராட்சித் தலைவர் ராவியத்துல் காதரியா தலைமை வகித்தார். மருத்துவர் சுப்பரமணியன், கீழக்கரை அரசு மருத்துவர்கள் ஜவாஹிர் ஹுசைன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேசினர் .நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.