Friday, August 3, 2012

ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் வாக‌னம்!விதிக‌ளை மீறினால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கை!கலந்தாய்வு கூட்டத்தில் காவ‌ல்துறை எச்ச‌ரிக்கை!


படம் : சாலிஹ் ஹுசைன்
கீழக்கரை நகரில் முறைகேடான படி பள்ளிக் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரும் ஆபத்தை பள்ளிக் குழந்தைகள் எதிர் நோக்கி இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியானதை தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, காவல் துறையினர் கடந்த (30.07.2012) அன்று திடீர் வாகன சோதனை செய்தனர். இந்த வாகன சோதனையின் போது பல வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
http://keelakaraitimes.blogspot.com/2012/07/blog-post_6066.html

இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றும் ஆம்னி டிரைவர்கள் திடிரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சரியான நேரத்தில் கல்வியகங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பெரும்பாலானவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெற்றோர்களில் பலரும் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.


முன்னதாக தினகரன் நாளிதழில் விழிப்புணர்வு குறித்து பேட்டியளித்த முசாமில் என்பவரை கண்டிப்பதாக பெயர் குறிப்பிடாமல் ம‌ர்ம‌ ஆசாமிக‌ள் மொட்டை நோட்டீஸ் வெளியிட்டிருந்தனர். இது குறித்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் கூறும் போது அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிகுழந்தைகள் உயிரை பணயம் வைக்காதீர்கள் எனவே முறையான அனுமதி பெற்று வாகனத்தை இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்திகள் வெளியிடப்பட்டது மிர‌ட்ட‌லுக்கு அஞ்ச‌ மாட்டோம் தொட‌ர்ந்து விழிப்புண‌ர்வு செய்திக‌ளை வெளியிடுவோம் என்ற‌ன‌ர்.


இதற்கிடையே கீழக்கரை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கீழக்கரை காவல் துறையினர், ஆம்னி ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், சார்பு ஆய்வாளர் திரு.கார்மேகம் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆம்னி ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் காவல் துறையினராலும், சமூக ஆர்வலர்களாலும் வழங்கப்பட்டது. அத்தனை அறிவுரைகளையும் ஏற்று முறையாக நடப்பதாக ஆம்னி ஓட்டுனர்கள் உறுதி மொழி அளித்தனர்.


இறுதியாக காவல் துறையினரால் எழுத்து மூலம் பெறப்பட்ட பின் வரும் கட்டுப்பாடுகளை, ஆம்னி ஓட்டுனர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

1. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் எப்போதும் முறையான ஆவணங்களும், வாகனம் தகுந்த பராமரிப்புடனும் இருக்க வேண்டும்.

2. தங்கள் வாகனங்களில் வரும் மாணவ, மாணவிகளை நல்ல முறையில் பள்ளிக்கு அழைத்து சென்று வீட்டில் விட வேண்டும். முக்கியமாக ஓட்டுனர்கள் எந்த பிள்ளையையும் தங்கள் மடியில் உட்கார வைத்து வாகனத்தை ஓட்டக் கூடாது.

3. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லு ஆம்னி வாகன ஓட்டிகள் தங்கள் பெயர், முகவர் உள்ளிட்ட முழு விபரம், வாகன உரிமையாளர் குறித்த விபரம், ஓட்டுனர் உரிமை நகல், ஆர். சி. புத்தக நகல், வாகனங்களில் ஏற்றி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் விபரம் போன்றவற்றை உடனடியாக காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும்.

4. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆம்னி வாகனங்களில் கண்டிப்பாக சினிமா பாடல்களை ஒலித்து கொண்டு ஓட்டக் கூடாது.

5. புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது. மேலும் நகருக்குள் தெருக்க‌ளிலும், வ‌ளைவுக‌ளிலும் மின்னல் வேகத்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விபத்துக்கள் ஏற்ப‌டுகின்ற‌ன‌. இதனை தவிர்க்க முறையான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். (இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.)


காவ‌ல் துறை த‌னியார் வாக‌ன‌ ஓட்டிக‌ளை அழைத்து பேசி அறிவுரை கூறிய‌தோடு நின்று விடாம‌ல் தொட‌ர்ந்து க‌ண்காணிக்க‌ வேண்டும்.மேலும் ப‌ள்ளிகுழ‌ந்தைக‌ளை அழைத்து செல்வ‌த‌ற்கு தனியார் வாகனங்கள் அர‌சு அனுமதியை பெற்றுள்ளார்களா என்ப‌து இன்ற‌ள‌வும் கேள்விகுறியாகத்தான் உள்ள‌து.மேலும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையான‌ இது குறித்து பெற்றோர்க‌ளும் ப‌ள்ளி நிர்வாகிகளோடு கலந்தாலோச‌னை கூட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தி நிரந்தர தீர்வு காண தொலை நோக்கு முடிவை காண‌ வேண்டும்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 3, 2012 at 8:54 PM

    மாணவச் செலவங்களை அவர்களின் பள்ளி வளாகத்திற்கு ஏற்றிச் செல்லும் வாகன்ங்களின் ஓட்டுனர்களின் திடீர் வேளை நிறுத்தம் அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சட்டம் த்ன் கடைமையை பாரபட்சம் இல்லாது தொடரட்டும். இது போன்ற இக்கட்டான் நிலையில் பள்ளி நிர்வாகமும் மாணவச் செல்வங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காது நிலைமையை பொருப்புடன் உணர்ந்து சட்டத்திற்கு புறம்பாக, எதிராக நடவடிக்கை செய்பவர்களை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும்.இது போன்ற தருணங்களில் காவல்துறையும் தார்மீகமான முறையில் செயல்பட்டு மாணவச் செல்வங்களின் படிப்பு பாதிக்காத வகையில் பாதுகாக்க வேண்டும்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.