Monday, August 13, 2012

தாசிம் பீவி கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி !



கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புகாரி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார்.மாணவிஷானாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் நந்தகுமார்,நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,முகம்மது ஹாருன் ஆலிம்,துணை முதல்வர் நாதிர கமால் முன்னிலை வகித்தார்.

கதிஜா பாமிதா ஆலிமா துஆ ஓதினார். ஏற்பாடுகளை கீழக்கரை மேலாளர் சேக் தாவுது கல்லூரி மேலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.