பட விளக்கம்:-
வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகள் மற்றும் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை வளப்படுத்த மரக்கன்றுகளும் கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கீழக்கரையில் சேரும் குப்பைகளில் மூன்று ஒரு பங்கு கோழி கழிவு என கூறப்படுகிறது.நகரில் நோய் பரவுவதற்கு கோழி கழிவுகள் ஒரு காரணம் என எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி மற்றும் வெல்பேர் அஸோசியேசன் ,யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோழி கழிவுகளை உரமாக்க திட்டம் தீட்டியது.
இதற்காக கோழிகடை உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோழி கழிவுகளை வெளியில் வீச கூடாது.குப்பை எடுக்கும் வாகனத்தில் தான் தர வேண்டும்என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோரா சார்பில் கோழி கழிவுகளை கடைகளிலிருந்து அகற்றுவதற்கு தேவையான் உபகரணங்களான டிரை சைக்கிள்,குப்பை தொட்டிகள்,மற்றும் கைஉரை,முக உரை உள்ளிட்டவை தேவை என நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கபட்டிருந்தது.
வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் இன்று கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமை வகித்தார்.துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிசனர் முஜிப் ரஹ்மான்,வெல்பேர் அசோசியேசன் மேலாளர் அப்துல் அஜீச்,யூத் எக்ஸ்னோரா மேலாளர் தணிகாச்சலம் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யூத் எக்ஸ்னோரா தணிகாச்சலம் கூறியதாவது,
கீழக்கரையில் ஏற்கெனவே கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை உரமாக்கும் முயற்சியில் இறங்கி தனியார் தோட்டத்தில் செயல்படுத்தி வருகிறோம்.இதுவரை 105 நாட்களில் 95டன் உரம் தயாரித்துள்ளோம்.இந்த உரம் அனைத்தும் மரம் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தாலாம்.
தற்போது நகராட்சி எங்களுக்கு இந்த உபகரணங்களை அளித்திருப்பது குப்பை மற்றும் கோழி கழிவுகளை அகற்றுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.விரைவில் கீழக்கரையில் 100 சதவீதம் குப்பை மற்றும் கோழி கழிவுகளை அகற்றி உரமாக்குவோம் என்றார்
சபாஷ். பராட்டுக்கள். ஒரு திட்டம் முழுமையாக வெற்றி காண வேண்டுமானால் இது தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கழிவுகளை பயன்படுத்தி உரங்கள் தயாரித்தால் மட்டும் போதாது. தயாரிக்க பட்ட உரங்கள் பயன் பாட்டிற்கு போயியே ஆக வேண்டும்.ஏனென்றால் புதிய உர தயாரிப்புகளுக்கு இடப்பிரச்சனை போன்ற சிக்கல் ஏற்படாது.
ReplyDeleteநமதூரைச் சுற்றி ஏராமான தென்னை மரங்கள் உள்ளன. அதன் உரிமையாளர்களில் அனேகர் கீழக்கரை வாசிகளே. முடிந்த அளவு அவர்கள் அனேகரையும் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து யோசித்து முடிவு செய்யலாம். ஊர் நலத்திற்காக அவர்களும் சிலர் முன் வரக்கூடும்.இது விஷயத்தில் நகரின் முதல் குடி மகளோடு சமூக ஆர்வலர்களும். பொது நல அமைப்புகளும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும். நிச்சயம் வெற்றிதான்.சேவை மனப்பான்மையோடு செயல் பட்டால் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும். நகரமும் நல் நலம் பெரும் என்பதில் இம்மி அளவும் சந்தேகம் இல்லை.
இது போல வருகால் விஷயத்திலும் கவனம் செலுத்துவார்களா? அதற்கான சிலாப் போடும் போது நீள வாக்கின் இரு மருங்கிலும் நகலாத அளவிற்கு பித்தி கட்டிபோட வேண்டும்.ஆங்காங்கே ஜங்ஷன்களை ஏற்படுத்தி நீர் போகும் திசையில் இரண்டு, மூன்று கமபி துண்டுகளை குத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் மீறி போகும் குப்பைகளை ஜ்ங்ஷன் மூடியை நீக்கினால் அடைக்கும் குப்பைகளை அறவே நீக்கி விடலாம்.
பெரிய காக்கா அபுல் கலாம் சொன்னது போல கனவு காண்கிறோம்.குப்பைகரை கின்னஸ் கரையாக மாறுமா? மாறும் இன்ஷா அல்லா...........அதிகார வர்க்கம் செயல்படுமானால்!!!!!!!