Friday, August 10, 2012
அரசு சார்பில் கீழக்கரையில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை!
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தென்னைந் தோப்புகள் உள்ளன . இங்கு விளையும் தேங்காய்கள் அதிகளவில் வெளியூருக்கு விற்பனைக்கு செல்கின்றன.ஆனால் இன்று வரை தென்னை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பெரிய அளவில் இப்பகுதியில் இல்லை என்பது குற்ப்பிடதக்கது. தேங்காய் பவுடர் , தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ,அதே போல் தென்னை நாறுகளை கயிறுகளாக திரித்தும் , அழகிய வீட்டு உபயோக விரிப்புகளகாவும் ,உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போனவற்றை இப்பகுதியில் அமைப்பதற்கு அரசு முன் வர வேண்டும் . இதன் மூலம் இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் மேலும் தென்னை மரங்களை அழித்து தென்னந்தோப்புகளை வீட்டு மனைகளாக விற்கும் அவல நிலையும் குறையும்
இது குறித்து தென்னை விவசாயி ஹசன் ஜலால் என்பவர் கூறியதாவது ,
நீண்ட காலமாகவே தென்னை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்க அரசு ஏறபாடு செய்யும் என்று காத்து இருக்கிறோம் ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை ,அரசின் தேங்காய் கொள்முதல் நிலையம் இங்கு இல்லை. மேலும் தேங்காய்க்கு நல்ல விலை கிடைப்பது அரிதாகி விட்டது .இதனால் பலர் தென்னை விவாசயத்தை கை விட்டு ரியல் எஸ்டேட் போனற தொழில்களுக்கு சென்று விட்டார்கள் .இனியாவது அரசு இப்பகுதியில் தென்னை சம்பந்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை உள்ளிட்டவை அமைக்க ஏறபாடு செய்தால் தென்னை விவாசாயம் வீறு நடை போடும்.இதற்காக ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரநிதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்.
hameed yasin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.