

கீழக்கரை சமூக ஆர்வலர் சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது,
கீழக்கரையில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கிவரும் ஆரம்ப சுகாதார நிலையம் ,இது மலேரியா சிகிச்சை மையமும் இங்கு இயங்கிவருகிறது ,இங்கு வாரத்தில் புதன் கிழமை அன்று 50 முதல் 70 குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பு ஊசி போடப்படுகிறது மற்றும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது .
ஆனால் இங்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அமர கூட நாற்காலி கிடையாது ,தடுப்பு ஊசி போடும் இடத்தில் இட நெருக்கடி மின்விசிறி கூட கிடையாது ,ஊழியர்களுக்குஅமர்வதற்கும் போதுமான அளவில் மேசை,நாற்காலி இல்லை
கட்டிடம் மிக மோசமாக உள்ளது , தாகம் எடுத்தால் குடிக்க தண்ணீர் கூட கிடையாது , இந்த சூழ்நிலை அங்கு வரும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அரசு சுகாதார மையம் ஏழை எளிய மக்களுக்காக நம்முடைய வரிப் பணத்திலிருந்து தமிழக அரசால் நடத்தப்படுகிறது.குறிப்பாக் கொள்ளை நொய்களான காலரா, மலேரிய போன்ற நோய்கள் நகரில் பரவி உக்கிர கட்டத்தை அடையும் வேளையில் ஏழை, எளிய மக்களுக்கு அதன் சேவை மகத்தானது.
ReplyDeleteநமது தொகுதி நாடாளுமன்ற, சட்ட மன்ற மக்கள் பிரத்நிதிகளுக்கு துதி பாடும் நமதூர் கூட்டத்தினர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடி நிவாரணம் தேடி மகுடம் சூட்டிக் கொள்ளலாமே அவர்களின் தொகுதி நிதியிலிருந்து இந்த குறைகளை களையலாமே.