கீழக்கரை நகராட்சி கமிஷனராக பொறுபேற்றுள்ள முகம்மது மைதீனுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர். அதன் நிர்வாகிகளான தமீமுதீன்,கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்,சாலிஹ் ஹீசைன்,பாபா பக்ருதீன்,மாணிக்கம்,சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் கீழக்கரையில் உள்ள பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் படியும்,குறிப்பாக ஊழல் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில், கீழக்கரை நகரின் மாதம் ஒரு வார்டாக சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் மற்றும் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சபாஷ ஆணையர் அவர்களே.இது மாதிரியான நடவடிக்கைகளைத்தான் நாங்கள் வெகுவாக எதிர் பார்க்கிறோம்.இதற்காகத்தான் கீழக்கரை நகராட்சிக்கு என தனி ஆணையரை நியமிக்க கோரி குரல் கொடுத்தோம். இனி நகரின் நலத் திட்டங்கள் செவ்வன் நடைபெறும் என நம்புகிறோம். தங்கள் பணி சிறக்க சீரிய வாழ்த்துகள்.
ReplyDelete