Friday, August 24, 2012

கீழக்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்!



கீழக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை  அழைக்கப்படும் அரிய வகை டால்பின்  மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

முப்பது கிலோ எடையும் ஐந்தரை அடி நீளமும் உடைய அரிய வகை மீன் என மீனவர்கள் தெரிவித்தனர். டால்பின் வகையாக இருக்கலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையை சேர்ந்த வனசரகர் ஜெயராமன்,வனக்காப்பாளர்கள் பாலகிருஸ்னன்,ரவிகுமார்,வேட்டை தடுப்பு காவலர் மகேந்திரன் கால்நடை மருத்துவர் ராதாகிருஸ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இறந்த மீன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு கடற்கரையோரம் புதைக்கப்பட்டது.


2 comments:

  1. intha Vahai Dolphin Meengal namathu pahuthiyil murkalangalil athiha alavil kana pattahu ethanai meenavarhal oongi meen endru kooruvathu valakam. koduva enathai sertha meengal ethanai eraikaha veatai adum. achamayam ethu kootam kootamaha thulli oduvathai parkalam. Meenavarhalin nanban endru oongi meenai alaiparhal.. karanam.. meenavar yaraeanum kadalil vilunthu thathalithal ithu thanathu muku purathal mutti meal noki elupum athea samayam karai noki thallum iyalbu udaiyathu.. karanam ethu kulanthai pondru vilayatu palakam konda meen enam

    ReplyDelete
    Replies
    1. இந்த வகை டால்பின் மீன்கள் நமது பகுதியில் முற்காலங்களில் அதிக அளவில் காணப்பட்டது. இதனை மீனவர்கள் ஓங்கி மீன் என்று கூறுவது வழக்கம். கொடுவா இனத்தை சார்ந்த மீன்கள் இதனை இரைக்காக வேட்டை ஆடும். அச்சமயம் இது கூட்டம் கூட்டமாக துள்ளி ஓடுவதை பார்க்கலாம்.மீனவர்களின் நண்பன் என்று ஓங்கி மீனை அழைப்பார்கள். காரணம் மீனவர் யாரேனும் கடலில் விழுந்து தத்தளித்தால் இது தனது முதுகு புறத்தால் முட்டி மேல் நோக்கி எழும்பும். அதே சமயத்தில் கரை நோக்கித் தள்ளும் இயல்பு உடையது. காரணம் இது குழந்தை போன்று விளையாட்டு பழக்கம் கொண்ட மீன் இனம். THANKS TO SOURCE: PRINCE LEE ADRIOIT IN ENGLISH, WHICH MODIFIED IN TAMIL

      Delete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.