Friday, August 3, 2012

நவீன கருவி மூலம் கணக்கெடுப்​பு! கீழ‌க்க‌ரையி​ல் ப‌சுமையின் அள‌வு குறைவதாக அதிர்ச்சி தகவல் !அதிகாரிக‌ள் எச்ச‌ரிக்கை !


செய்தியாளர் : சேகு சதக் இப்ராகிம்


கீழக்கரை பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு தோட்டங்கள் அழிக்கப்பட்டு இவை அனைத்தும் பிளாட்கள் போடப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதாலும், மேலும் மரம் வளர்ப்பதும் குறைந்து விட்டதால் பசுமையின் அளவு குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்தோடு கூறி வரும் நிலையில்

கீழ‌க்க‌ரை ப‌குதிக்கு பசுமை ஆய்வுக்காக‌ வாக‌ன‌ங்க‌ளில் வ‌ருகை த‌ந்த வனத்துறை அதிகாரிக‌ளை ச‌ந்தித்து பேசிய‌ போது அவ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து....

கீழக்கரை பகுதி முழுவதும் மரம் கணக்கு எடுக்கும் பணி நவீன‌ கருவிகள் மூலம் நடைபெறுகிறது. இதன் மூலம் காற்றின் ஈரப்பதம் ,மழையின் அளவு,ஆக்சிஜென் அளவு ,போன்ற பல் வேறு கணக்கெடுப்புகள் மூலம் இந்த பணிகள் நடைபெறுகிறது

கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டும் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.

இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது .மேலும்

கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இலவசமாக மரம் வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

2 comments:

  1. சிரிப்புதான் வருகிறது. கீழக்கரையில் மரம் வளர்க்க இடம் எங்கே உள்ளது? எல்லாம் வீட்டடி நிலங்கள்.இன்றைய நிலவரப்படி சதுர அடி ரூபாய்.2000 முதல் ரூபாய்.2666 வரை (கோல் ரூபாய். ஒன்னரை முதல் இரண்டு லட்சம் வரை).மரம் வளர்ப்பதில் மக்கள் அக்கரை காட்டுவார்கள் என்பது வீணாணா கற்பனையே.

    அதே நேரத்தில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பு இருக்க கட்டாயப்படுத்த வேண்டும்.வீதியில் பெய்யும் மழை நீரைத்தவிர ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு செல்லாதவாறு அமைப்புகள் இருக்க வேண்டும். இது நம்தூரில்; சாத்தியமே. காரணம் ஏறத்தாழ அனைத்து வீடுகளும் கட்டுமான வீடுகளே.கிணறு இல்லாத் வீடுகளே கிடையாது. மழை நீர் சேமிப்பு அமைப்பு பலன் அளிக்கக் கூடியது என நிருபிக்கப்பட்ட உயர்ந்த திட்டமாகும்.கோடிக்கணக்காணோர் பயன் அடைந்த திட்டமாகும்.

    நக்ரைச்சுற்றி மண்ணின் வளத்தை பாழடிக்கும் காட்டு க்ரு வேல மரங்களை அறவே ஒழித்து வேம்பு போன்ற மரங்களை வளர்த்தால் மாசு கட்டுப்படும். மழை வளம் பெருகும்.உலகம் உஷ்ணமாதல் (GLOBAL WARMING) குறைய நல் வாய்ப்பாக அமையும்.

    ReplyDelete
  2. ஒலகம் பூராவும் இதே நெலமதாங்க! இங்க மட்டும் இல்ல! இருக்குற தோட்டம், தோப்பு, தொறவு, வயல், வெளி, காடு, கம்மா, கொளம், குட்ட-ன்னு ஒரு எடம் பாக்கி இல்லாம ஊடு கேட்டிக்கிட்டே போன எங்க மரம் வளருமாம்?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.