Wednesday, August 15, 2012

கீழக்கரையில் சாலையோர கழிவு நீர் கால்வாய்களுக்கு சிமெண்ட் மூடி தயாராகிறது!சேர்மன் மற்றும் துணை சேர்மன் நேரில் ஆய்வு!

த‌யாராகும் புதிய‌ சிமெண்ட் மூடிக‌ள்

நடுத்தெரு பகுதியில் சிமெண்டி மூடி உடைந்து காண‌ப்ப‌டும் க‌ழிவுநீர் கால்வாய்


கீழக்கரையில் சாலையோரங்களில் கட்டபப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள் மூலம் கழிவு நீர் வெளியேறுகிறது.இந்த கால்வாய்களில் அடிக்கடி குப்பைகள் சேர்வதால் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டு வந்தது.மேலும் கால்வாய் திறந்து இருப்பதால் நடந்து செல்பவர்கள் கால் தவறி விழும் நிலையும் ஏற்படுகிறது.ஏற்கெனவெ அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூடிகள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளது எனவே பல்வேறு இன்னல்களை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் மூடிகளை அமைப்பதற்கு ரூ 5 லட்சம் செலவில் ஏற்பாடுகளை செய்தது.

இதற்கான சிமென்ட் மூடிகள் அமைக்கு பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை நகராட்சி சேர்மன் ராவியத்துல் காதரியா மற்றும் துணை சேர்மன் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து சேர்ம‌ன் ம‌ற்றும் துணை சேர்ம‌ன் ஆகியோர் கூறிய‌தாவ‌து,

முத‌ல் க‌ட்ட‌மாக‌ 500க்கும் மேற்ப‌ட்ட‌ சிமெண்ட் மூடிக‌ள் த‌யார் செய்யும் ப‌ணிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.இன்னும் 10 நாட்களில் இவை தயார் ஆகி விடும்.மேலும் கீழக்கரை நகரில் எங்கெல்லாம் மூடி இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் மூடி அமைத்து இத்திட்டத்தை விரிவு ப‌டுத்துவ‌து குறித்து ஆய்வு செய்யப்ப‌ட்டு செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ற‌ன‌ர்.

2 comments:

  1. mangathavin thangchi maganAugust 15, 2012 at 1:55 PM




    கீழக்கரை முதல் குடிமகளான ராவியத்துல்காதரியாவும் துணை சேர்மனும் இணைந்து பணிகளை செய்வது சந்தோசம் இதே போல் ஒற்றுமையுடன் செயல்பட்டு கீழக்கரைக்கான நல்ல பணிகளை தொடர வேண்டும் என்பதே கீழக்கரை மக்களின் அவா

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 15, 2012 at 8:22 PM

    குப்பைகரையான கீழக்கரை நகரை கின்னஸ் கரையாக மாற்றும் முயற்சியில் மக்கள் பிரதிநிதிகள் செயல் படத் தொடங்கி விட்டார்கள். மட்டற்ற மகிழ்ச்சி. இது போல அனைத்து நகர் நலப் பணிகள் தொடரட்டும்.

    இந்த காலக்கட்டத்தில் பொது மக்களாகிய நமக்கும் தார்மீக கடமை ஒன்று உண்டு.அதாவது வீட்டு கழிவு நீரை வாருகால் வழியாக வெளியேற்றும் குடும்பத்தினர்கள் குறிப்பாக சந்துக்குள் குடி இருப்போர் வீட்டுக்குள் கழிவுநீர் செல்லும் குழாயில் சல்லடையை கண்டிப்பாக வைக்க வேண்டும். இது மூலம் தேங்காய் தும்புகள், சிறு வகையான் துண்டுகள் மற்றும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய குப்பைகளை வீட்டிலேயே தடுத்து விடலாம். சிறு துளி பெரும் வெள்ளம் போல அடைப்புதான் மிஞ்சும். இந்த கருத்தை மனதில் நிலை நிறுத்தி நகர் சுகாதாரத்திற்கு ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறேம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.