Friday, August 3, 2012
கீழக்கரையில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேர மின் தடை!மின்வெட்டு நேரத்தை குறைக்க கோரிக்கை!
கீழக்கரை, காஞ்சிரங் குடி, மாயாகுளம், ஏர்வாடி பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன.
தற்போது ரமழான் மாதத்தின் நோன்பை யொட்டி வீடுகளில் அதி காலையில் தாய்மார்கள் 2 மணிக்கே எழுந்து நோன்பு வைப்பதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர் மேலும் அஸர் தொழுகைக்கு பின் மாலையில் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.ஏராளமானவர்கள் இரவு நேரங்களில் திராவிஹ் தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.எனவே இச்சமயங்களில் மின் தடை இல்லாமல் இருந்தால் நன்மை பயக்கும்.
ஆனால் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில், தற்போது அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடு தலாக மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் பல நேரம் மின்வெட்டு இருப்பதால் இஸ்லாமிய மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொழுகை சமயங்களில் மின் வெட்டு ஏற்படாமல் இருக்க மின்வாரியம் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என ஜமாத் அமைப்பினர் கோரி க்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளி ஜமாத் உதவி செயலாளர் ஹபீப்தம்பி கூறுகையில்,
தற்போது ரமழான் நோன்பு ஆரம்பித்துள்ள நிலை யில் பல மணி நேரம் நிறுத்தப்படுவதால், பெரும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மின் வாரியத்திற்கு தக வல் கொடு த்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ரமழான் மாதம் முடியும் வரையுமாவது அறிவிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.