Saturday, August 4, 2012

கீழக்கரை 2,3 வார்டுக‌ளில் மலேரியாவில் அதிக‌ம் பாதிப்பு! 3 மாத‌த்தில் ம‌லேரியாவை ஒழிப்போம்! சுகாதார‌த்துறை அறிவிப்பு !
இராமநாதபுரம் மாவட்ட சுகாதார‌ நலத்துறை மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி கிழக்கு தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற‌து.

இதில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் பாலசுப்பிரமணியன் (துணை இயக்குனர் ,சுகாதார நலப்பணிகள் ராமநாதபுரம்) .....

இந்த பகுதியில் மூன்று மாதத்தில் மலேரியா இல்லாமல் ஆக்குவது என் நோக்கம் என்றும் ,பின்னர் டெங்கு விழிப்புணர்வு பட விளக்கம் பற்றி விரிவாக பேசினார் ,தமிழ்நாடு அரசு aedes mosquito வை மக்களின் பகைவன் என்று அறிவித்துள்ளது என்றும் இந்த பகுதிகளில் பிளாஸ்டிக் பை ,பிளாஸ்டிக் கழிவுகளால் அதில் தங்கும் தண்ணீரால் டெங்கு கொசு உருவாகிறது என்றார் ,கீழக்கரை 1 வது ,2 வது ,3 வது வார்டுகளில் அதிகமான மலேரியா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது ,இந்த பகுதிகளில் மலேரியா வராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துவருகிறது என்றும் கூறினார்

டாக்டர் செய்யது ராசிக்தீன் பேசுகையில்...

கீழக்கரை பகுதிகளில் டெங்கு அறிகுறி வந்த உடன் அரசு மருத்துவமனையை அணுகாமல் தனியார் மருத்துவமனையை அணுகுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றார் .

பேரா .அலாவுதீன் ,பட்டய தலைவர் கீழக்கரை ரோட்டரி சங்கம் நிகழ்ச்சியில் தலைமை வகித்தார் .

இதில் வாழ்த்துரை வழங்கிய உமர் அப்துல் காதர்(நிறுவனர் - மக்கள் நல அறக்கட்டளை ) பேசுகையில்...

எங்கள் அறக்கட்டளை சார்பாக 8 லட்சம் செலவில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தொட்டிகள் வழங்குகின்றோம் ,அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் என பலர் குப்பை அகற்ற முயற்சி செய்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவே மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

பிறகு இப்தார் நிகழ்ச்சி அனைவரும் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

இதில் கீழக்கரை நகராட்சி தலைவி ராவியதுல் கதரியா ,யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செய்து அப்துல் காதர்,சீதக்காதி அறக்கட்டளை DGM சேக் தாவுது ,டாக்டர்கள் ஜவாஹிர் ஹுசைன்,அல் அம்ரா,ராசிக்தீன்,கைராத்துன் ஜாலிய துவக்க பள்ளி தாளாளர் சாதிக் ,நகர் ரோட்டரி சங்க தலைவர் ஆசாத்,கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,சாகுல் ஹமீது ,ஆரம்ப சுகாதார ஊழியர்கள் ,முஹம்மது சதக் கல்லூரி மாணவர்கள் ,சமுக ஆர்வலர்கள் ,காவல் துறை துணை ஆய்வாளர் ,பொதுமக்கள் ,அதிக அளவில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாலசுப்ரமணியன் .ரோட்டரி சங்கம் செயலாளர் நன்றி கூறினார் ,

1 comment:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 4, 2012 at 7:34 PM

  இநத செய்தியில் டாக்டர் பாலசுப்பரமணியன்,துணை இயககுனர் - சுகாதார நலப் பணிகள்,இராமநாதபுரம் அவர்கள் கீழக்கரையில் 1,2 மற்றும் 3 வது வார்டுகளில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

  அதே நேரத்தில் கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஜீ த்மிழ் தொலை காட்சியில் ஒளிபரப்பான சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தொலைபேசியில், வரும் திங்கட்கிழமை முதல் முன்னால் கீழக்கரை ஆணையர் (பொருப்பு) ஆகப் போகும் சகோ:முஜீப் ரஹ்மானிடம் தொடர்பு கொண்டபோது அவர் கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரத்தில் மலேரியா மற்றும் டெங்கு நோய் இருப்பதாக கூறுவது வீண் விவாதம் என திருவாய் மலர்ந்தார். அதை கேட்ட ஊர் நல விரும்பிகள் அனைவரும் கொதித்து போனார்கள். என்னே அவரின் கடமை உணர்வு.

  கடந்த சில மாதங்களாக ஊர் மக்கள் அனேகர் பரவலாக சுகாதார கேடினால் மலேரியா, டெங்கு காய்ச்சலால் குறிப்பாக குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது என குமுறி வந்தார்கள்.இப்போது டாக்டர் பாலசுப்பிர்மணியனின் பேச்சு அதை நிருபிக்கிறது. அரசியல் வாதியாக போக வேண்டியவர்
  நாம் வாங்கி வந்த வரம் அவர் சில காலம் நமக்கு ஆணையர்(பொருப்பு) ஆக இருக்க வேண்டியதாகி விட்டது. இவருடைய நிர்வாகத்தில் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பதை மக்களின் கற்பனைக்கு விட்டு விடுவதுதான் சாலச் சிறந்தது!!!

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.