
கீழக்கரை நகராட்சிக்கு நீண்ட காலமாக தனி கமிஷனர் நியமிக்கபடாமல் இருந்து வந்தது.ராமநாதபுரம் கமிஷனர் முஜிபுர் ரஹமான் கூடுதல் பொறுப்பாக கீழக்கரையையும் கவனித்து வந்தார்.இதனால் பல்வேறு பணிகள் தாமதமாகின்றன என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது.
இந்நிலையில் நகராட்சி தலைவர் ராவித்துல் காதரியா உள்பட பல்வேறு தரப்பினரும் நகராட்சிக்கு தனி கமிஷனர் நியமிக்க தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது புதிய கமிஷனராக முகம்மது முகைதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.கீழக்கரை வருகை தந்த அவருக்கு நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
வருக வருக என வாயார வாழ்த்தி வரவேற்கிறோம்.
ReplyDeleteநடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் (தலைவி உட்பட), அனைத்து அலுவலர்களும், பொது மக்களின் நம்பிக்கையை சீரழித்து, சீர் கெட்டு சின்னாபிண்ணமாகி கிடக்கும் நகராட்சி நிர்வாகத்தை செம்மை படுத்த ஆணையர் அவர்களுடன் ஒத்துழைத்து, நகர் நலத் திட்டங்கள் செவவன நடைபெற, அன்புடன் வேண்டுகிறோம். காலம் உங்களை வாழ்த்தும்.
ஆணையர் அவர்கள் ஊரிலேயே தங்கி இருந்து பணிகளை கண்காணிக்க விருப்புகிறோம். அவர் தங்குவதற்கு உரிய வசதிகளை நகரின் மூத்த குடிமகள் ஏற்பாடு செய்து கொடுக்க முன் வர வேண்டும்.
நல்லதையே நாடுவோம்.நல்லதே நடக்கும் என நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரம்
ஆணையர் முகம்மது முகைதீன் அவர்களுக்கு கீழக்கரை பொது மக்களின் இதயம் பூர்வமான இனிய ரமழான் வாழ்த்துகளும், சலாமும் உரித்தாகுக
ReplyDelete