கீழக்கரை நகராட்சிக்கு நீண்ட காலமாக தனி கமிஷனர் நியமிக்கப்படாமல் கூடுதல் பொறுப்பாக ராமநாதபுரம் கமிஷனர் முஜிபுரஹ்மான் கவனித்து வந்தார். இதனால் பல்வேறு பணிகள் தாமதமாகி வந்தன. புதிய கமிஷனராக முகம்மது முகைதீனை தமிழக அரசு நியமித்தது. அவர் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.
நகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் முகம்மது முகைதீன் கூறுகையில்,
கீழக்கரையில் பொது சுகாதாரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கப்படும். நகராட்சி தலைவரிடம் ஆலோசனை செய்து சுகாதாரப்பணிகள் முடுக்கிவிடப்படும். குப்பைகளை வீட்டுக்கு வீடு எடுப்பதற்கு புதிதாக ரூ.3.5 லட்சம் செலவில் 15 டிரைசைக்கிள்களும், ரூ.2.5 லட்சம் செலவில் 60 குப்பை தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகராட்சியின் பயன்பாட்டிற்கு விடப்படும், குடிதண்ணீர் பைப்புகள் சேதமடைந்துள்ளதால் விரைவில் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். நகராட்சியின் இடங்களை கடைகள் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்றார்.
கீழக்கரையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்ட கமிஷனர் குறிப்பாக அத்தியிலைதெரு, என்.எம்.டி. தெருவில் குப்பைகள் குவிந்துகிடந்ததை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.