Thursday, August 9, 2012

கீழக்கரை முக்கிய சாலையில் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!



கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஹோட்டல் மற்றும் டீக்கடை அருகில் தொடர்ந்து கழிவு நீர் ஓடுகிறது.இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சுகதாரகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இது குறித்து ந‌க‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீது கான் கூறுகையில்,

இப்பகுதியில் ப‌ழ‌ம் பெருமை மிகு ஜும்மா ப‌ள்ளி உள்ள‌து.அன்றாட‌ம் ஏராள‌மான வெளியூர்,மற்றும் வெளிமாநில சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து செல்கின்ற‌ன‌ர்.என‌வே கீழ‌க்க‌ரையில் இப்ப‌குதி ம‌க்க‌ள் ந‌டமாட்ட‌ம் அதிக‌முள்ள‌ இட‌மாகும். இந்நிலையில் இங்கு தொட‌ர்ந்து சாக்க‌டை ஓடி கொண்டிருக்கிற‌து. ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ப‌ல‌முறை ந‌க‌ராட்சியில் புகார் செய்ய‌ப்ப‌ட்டுள்ளது.அருகிலேயே டீக்க‌டையில் போன்டா,வ‌டை போன்ற‌ தின்ப‌ண்ட‌ங்க‌ள் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுவதால் தொற்று நோய் ப‌ர‌வும் அபாய‌ம் உள்ள‌து என‌வே ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.