கீழக்கரை காவல் நிலையத்தில்....
சில நாட்களுக்கு முன் கீழக்கரை பஸ் நிலையம் அருகே அன்பு நகரில் கோர்ட் ஊழியர் நாகராஜன் வீட்டில் அவர் இல்லாத நேரத்தில் அவரது குழந்தைகளிடம் உறவினர் போல் நடித்து 9பவுன் நகை மற்றும் ரூ 1000 ரொக்க பணத்தையும் ஒருவர் திருடி சென்றார். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் செய்த நபரை தேடி வந்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் எஸ்.ஐ கார்மேகம் உள்ளிட்ட காவல்துறையினர் இதற்கு முன் தமிழகத்தில் உறவினர் போல் நடித்து திருடப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து அதே கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் பெரியபட்டிணம் தங்கையா நகரை சேர்ந்த சீனி நூர்தீன்(50) கீழக்கரை பஸ் நிலையத்தில் நகைகளோடு நின்றிருந்த போது அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், உறவினராக நடித்து, நகைகள் மற்றும் பணம் திருடியதும், இவர் மீது 30க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதில் பல வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற இவர் கடந்த ஒரு வருடம் சிறையிலிருந்து கடந்த ஜூலை 14ல், தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். இவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கீழக்கரையில் திருடப்பட்ட 9 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்
ReplyDeleteread more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html