Friday, August 3, 2012

கீழக்கரையில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ராகிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு கூட்டம் !


கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் ராகிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம் முதல்வர் முகம்மது ஜகபர் தலைமையிலும் இயக்குனர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலையிலும் நடந்தது. எம்.பி.ஏ.,துறை தலைவர் முஸ்தபா வரவேற்றார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், மாணவர் அப்துல்பாசித் பேசினர். முகம்மது மைதீன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பேசுகையில் ,ராகிங்கிலும் ,ஈவ்டீசிங்கிலும் ஈடுபட்டால் ரூ25 ஆயிரம் அபராதம் கல்லூயிலிருந்து நீக்கம்,வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாது. எனவே மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் சகோதரர்கள் போல் நடத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.